பள்ளிகளில் 50 % பாடத்திட்டம் குறைப்பு ஏன்?

50 சதவீதம் பாடத்திட்டம் குறைப்பு 

கொரான காரணமாக மார்ச் மாதம் முதல் கல்வித்துறை முடங்கி போய் உள்ளன. 
அதிலும் குறிப்பாக பள்ளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன. 





இந்நிலையில் கடந்த டிசம்பர் 6 தேதி முதல் கல்லூரிகளில் படிக்கும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் தொடங்கப்பட்டு நடைப்பெற்று வருகின்றன. 


பள்ளிகள் எப்பொழுது திறக்கப்படும் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை.

 குறைந்த பட்சம் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டுமாவது பள்ளிகளை திறக்க வேண்டும் என ஆசிரியர்கள்,பொற்றோர்கள் வலியுறுத்துகின்றனர். இல்லையெனில் இந்த கல்வியாண்டு முடிவதில் பெரும் சிரமம் ஏற்படும். 





ஜனவரி மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படாலாம் என்ற அறிவிப்பு வரலாம் என அனைவரும் எதிர்பார்பில் உள்ளனர். அவ்வாறு ஜனவரியில் பள்ளிகளை திறந்தால் பின் பற்ற வேண்டிய பாடத்திட்டம் குறித்த அறிவிப்புக்கு தான் அனைவரும் காத்துக்கொண்டு உள்ளனர். 


இந்நிலையில் கல்வியமைச்சர் திரு. செங்கோட்டையன் அவர்கள் கூறியதாவது இப்போது இருக்கும் சூழ்நிலையில் 50% பாடம் குறைக்கப்பட்டு ஆசிரியர்கள் நடத்தும் பகுதிகளில் இருந்து மட்டுமே கேள்விகள் கேட்க்கப்படும் என கூறினார். 

அதன் படி 10,11,12 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் 50% குறைக்கப்படும். 


இது சிறிது ஆறுதலாக இருந்தாலும் மாணவர்களின் உயர்கல்வி படிப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. 


அதிலும் முக்கியமாக NEET, IIT JEE போன்ற தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். 

Comments