ஏன் நம்பிக்கை இல்லை உங்கள் மீது உங்களுக்கு?

நம்பிக்கை மற்றும் தன்னம்பிக்கை 

            இப்போது நாம் சந்திக்கும் மக்களில் பாதிக்கு மேலாக வாழ்வில் விரக்தி அடைந்தவர்களாய் காணப்படுகிறார்கள். 
என்ன வாழ்க்கை எனக்கு மட்டும் தான் இப்படி நடக்கிறது! பேசாமா செத்து போய்டலாம் என்றெல்லாம் பலவிதங்களில் விரக்தியாக பேசுகின்ற மனிதர்கள் இப்போது அதிகம். 






⛔இதற்கு காரணம் தான் என்ன? 
இதை நீங்களே ஆராய்ந்து பார்த்தால் தெரியும் உங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லை! 


⛔ஒரு செயல் ஆரம்பிக்கும் முன்னமே என்னால் அதை செய்ய இயலாது என்று கூறி நம்மை நாமே சிதைப்பதுதான் இந்த விரக்திக்கு முதல் காரணம். 


⛔இந்தியாவில் எத்தனை நபர்கள் ஒரு வேலை சாப்பாடு கூட இல்லாமல், தவித்து கொண்டு இருக்கின்றார்கள் தெரியுமா? கடவுள் நம்மை இந்த நிலையில் வைத்து இருப்பதே நம்முடைய பாக்கியம் அதை புரிந்து கொள்ளுங்கள். 




⛔வாழ்க்கை ஒரு பரமபதம் கிடையாது ஒரே நாளில் நாம் அம்பானி ஆகவும் முடியாது, ஆண்டியாகவும் கடவுள் விட மாட்டார். 


⛔முதலில் உங்கள் மேல் நீங்கள் 100 சதவீதம் நம்பிக்கை வையுங்கள்!


 ⛔ஒரு செயல் ஆரம்பிக்கும் முன் ஒரு சதவீதம் கூட முடியாது என்று எண்ணாமல், முடியும் எண்ணால் மட்டுமே முடியும் என்ற கர்வத்துடனும் தன்னம்பிக்கை உடனும் இறங்குங்கள் வெற்றி நமதே. 


இப்படிக்கு 
உங்கள் நண்பன் வின்சென்ட். 




வாழ்க வளமுடன். 

Comments

Post a Comment