இன்று உங்களுக்கு நல்ல நாளா?

எது நல்ல நாள்? 

இறைவன் படைத்த அனைத்து நாட்களும் சரி, அனைத்து நிமிடங்களும் சரி, ஏன் ஒவ்வொரு நொடியும் நல்ல நேரம் நல்ல காலம் தான்!





ஆனால் மனிதன் தன் தேவைக்காக நல்ல நேரம், கெட்ட நேரம் என்று உருவாக்கிவிட்டான்.

இன்று படித்தவர்கள் தான் இதில் அதிகம் மூழ்கி போய் தங்களது பணத்தை விரயம் செய்கின்றோம். 


உங்களுக்காக ஒரே ஒரு உதாரணம் நீங்கள் இதை அதிகம் கேள்விபட்டு இருக்கலாம். 


➡️➡️நாம் சென்று கொண்டு இருக்கும் போது தவறுதலாக உங்களுக்கு விபத்து ஏற்பட்டு விட்டது. 





இன்று உங்களுக்கு கெட்ட நேரம் என நீங்கள் காலையில் நாட்காட்டியில் பார்த்து வந்து இருப்பீர்கள். 

உங்கள் மனதில் உடனே அது தோன்றும் இன்று நமக்கு கெட்ட நேரம் ஆச்சே என்று! 

உங்களை நீங்களே காப்பாற்ற முடியாத நிலையில் கிடக்கும் போது ஒருவர் உங்களை தோழில் சுமந்து மருத்துவமனையில் சேர்த்து உங்கள் உயிரை காப்பாற்றினால் அன்றைய நாளை நீங்கள் நல்ல நேரம் என்று சொல்லுவீர்களா! 
இல்லை கெட்ட நேரம் என்று சொல்லுவீர்களா! 

நினைத்து பாருங்கள்! 
இறைவன் நமக்கு படைத்த அனைத்து நேரங்களுமே நல்ல நேரம் மட்டுமே! 
நாம் தான் அதனை மாற்றியமைத்து கொள்ளுகிறோம். 


காலையில் எழுந்தவுடன் 
இன்று நமக்கு என்ன நாள் !
மகிழ்ச்சி? வருத்தம்? துக்கம்? இப்படிப்பட்ட எதையும் பார்க்காமல் !


இறைவா இந்ந அருமையான நாளை எனக்கு கொடுத்தற்க்கு நன்றி தெரிவித்து ஆரம்பிப்போம் !

நமக்கு எல்லா நேரமும் எல்லா நொடியும் 
நல்ல காலமே!
 நல்ல காலமே! 



நல்லதையே நினைப்போம் நல்லதே நடக்கும்! 
நன்றி!



இந்த பதிவு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்! நன்றி !

Comments