- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
அவமானம் அதன் எல்லைதான் என்ன?
இக்கால சூழ்நிலையில்,
⛔பலரும் கடன் வாங்கி அதை அடைக்க முடியாமல் தவித்து தற்கொலை செய்து கொள்ள காரணம் அவமானம்.
⛔நன்றாக எண்ணால் படிக்க முடிந்தும் தேர்வில் நல்ல மதிப்பெண் பெறவில்லை என்றால் அவமானமாகிவிடுமோ என்று அஞ்சி தற்கொலை செய்து கொள்பவர்கள் அதிகம்.
இவ்வாறு பலக்காரணங்களால் நம்மில் பலர் அவமானம் அடைந்து விடுவோமோ என்ற எண்ணத்தில் உயிரை மாய்த்தவர்கள்தான் அதிகம்.
ஏன் இந்த எண்ணம் தோன்றுகின்றது?
குற்ற உணர்ச்சி பெருகும் போது நம்மை அறியாமல் தற்கொலை எண்ணம் தூண்ட படுகின்றன.
⛔எத்தனை பேர் யோசித்து பார்த்து இருப்போம் சாலையில் பிச்சை எடுப்பவர்கள் யார் அவர்களை ஏன் கடவுள் இந்த நிலையில் வைத்து இருக்கிறான்.
⛔பிச்சை எடுக்கும் அளவுக்கு யாரும் போக போவது இல்லை அவமானம் அடைந்தவர்கள்.
⛔நாம் அடையும் அவமானத்தை வெகுமானமாக மாற்றுவதில் தான் சாதாரண மனிதர்களுக்கும் சாதித்த மனிதர்களுக்கும் இருக்கும் வித்தியாசம்.
சாதித்த அனைவரிடமும் கேட்டுபாருங்கள் அவர்கள் வாழ்வில் பட்ட அவமானத்தை.
எனவே இங்கு நாம் சில வருடங்கள் இருக்க போகின்றோம்.
கடவுள் கொடுத்த நாட்களை நாமாக முடித்து கொள்ள நமக்கு அதிகாரம் இல்லை.
அவமானம் அடைந்த இடத்தில் தான் நம் வெற்றி ஆரம்பம் ஆக வேண்டும்.
நாம் படுகின்றன அவமானத்தை வெகுமானமாக மாற்றி நேர்மறை எண்ணங்களை நம் மனதில் கொண்டுவருவோம் வாழ்வில் வெற்றி பெறுவோம்.
இந்த பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் நன்றி!
Comments
Post a Comment